கம்போடியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்துடன் கூடிய கம்ப்யூட்டர் வேலைக்கு ஆள் தேர்வு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவலை நம்பி அதில் குறிப்பிட்டிருந்த முகவர்களை தொடர்பு கொண்ட இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை சுற்றுலா பயண விசாவில் கம்போடியாவிற்கு அனுப்பி, சட்ட விரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். மேற்கண்ட மோசடியில் உடந்தையாக போலி முகவர்கள் யாராவது திருச்சி மாநகரில் உள்ளார்களா என தீவிர விசாரணை செய்யுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் 30/22 த.பெ.முகமது இஸ்மாயில் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த ரஞ்சித்குமார் 29/22 த.பெ.கலியமூர்த்தி ஆகியோர்கள்
தில்லைநகரில் இயங்கி வரும் Care consultancy நிறுவனத்தின் மீது கொடுத்த புகாரின்பேரில், தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்ட்டு, எதிரி Care consultancy நிறுவனத்தின் இயக்குநர் ஷானாவாஸ் 39/22 த.பெ.மெகபூப்ஜான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 01.10.2022ம் தேதியன்று கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
எதிரி ஷானாவாஸ் என்பவர் தொடர்ந்து இளைஞர்களிடம் பணம் பெற்றுகொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர் விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி ஷானாவாஸ் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தமிழக இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இது போன்ற மோசடிகள் பற்றியும் அதில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. இதுபோன்று உண்மைதன்மை அறியாமல் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவேண்டாம் எனவும், இதுபோன்ற போலி முகவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும், இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments