கடந்த 21.3.2023 ஆம் தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணி அம்மையார் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக பேசிய அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரியான கஞ்சா கணேசன் மற்றும் குலாம் தஸ்தஹிர் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் குலாம் மீது கடந்த 11/4/2023 ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கஞ்சா கணேசன் மீது ஆறு அடிதடி வழக்குகளும் ஒரு கஞ்சா வழக்கு உட்பட ஏழு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
எனவே எதிரி கஞ்சா கணேசன் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எனவும் கஞ்சா விற்பனையில் ஈடுபாடுபவர் என விசாரணையில் தெரிய வருவதால் மேற்படி தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார் அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் கஞ்சா கணேசன் என்பவர் மீது குண்டல் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலின் கீழ் அடைக்கப்பட்டார்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments