Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கணவனின் நினைவு நாளில் குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதி பச்சமலையில் பூனாசி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நிஷா (21). கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கார்த்திக் குழந்தைக்கு பால் காய்ச்சும் போது ஸ்டவ் வெடித்து இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் மற்றும் நிலவன் என்ற இரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நிஷாவின் கணவரது நினைவு தினம் இன்று வருவதை ஒட்டி கடந்த 2 தினங்களாக சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 25) பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தனர்.  அப்போது தனது ஒன்றரை வயது மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷமருந்தி தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டுள்ளார்.

பின்னர் வெளியில் சென்றிருந்த பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்த போது நிஷா மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் நிஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுப்பற்றி தகவலறிந்து வந்த துறையூர் போலீஸ்சார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை இளவேனில் நிலவனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *