திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் பேபி கமலா. இவருடைய கணவன் இறந்த நிலையில் மாற்றுத்திறனாளியான தன் மகனை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்ல இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்.
இவருடைய மகன் சுதாகர் (37). மாற்றுத்திறனாளியான இவருக்கு கை மற்றும் கால்கள் சரிவர செயல்படவில்லை. வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத தன் மகனுக்கு வேலை வேண்டும் அல்லது 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள மகனுக்கு அரசு வழங்கும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.
இந்த மனுவை பெட்டியில் போட அதிகாரிகள் தெரிவித்தும் தன் பெட்டியில் போட மாட்டேன் என மறுத்துவிட்டார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து மனு அளித்த வண்ணம் உள்ளதாகவும்,
மாற்றுத்திறனாளி மகனுடன் ஒவ்வொரு அலுவலகமாக சென்று மனு அளித்து வரும் தனக்கு இன்று வரை எந்த ஒரு பலனும், பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்.
எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தன்னுடைய மகனுக்கு உதவித் தொகையோ அல்லது வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments