Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிர் மீட்ட தாய் திருச்சி அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்

No image available

உயிருக்கு போராடிய மகனுக்கு சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிர் மீட்டு எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறார் பார்வதி. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நெருஞ்சலகுடி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவானந்தம் மகன் வைத்தீஸ்வரன்.

19 வயதான வைத்தீஸ்வரன் கடந்த 4 மாதங்களாக சிறுநீரக கோளாறுகள் அவதியுற்றதால் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு வாரம் இரண்டு முறை முறையான ரத்த டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்கள் கூறிய பிறகு அவரது தாய் பார்வதி தன் மகனுக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்தார். அதன் பின் இருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் சட்டரீதியாக DME கமிட்டியின் ஒப்புதல் பெற்று முதல்வர் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ் வழிகாட்டுதலின்படி

சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பிரபாகரன், ரவி, சிறுநீரக மருத்துவர் பாலமுருகன், கௌதமன், மயக்கவியல் மருத்துவர் சிவக்குமார், இளங்கோ மற்றும் செவிலியர்கள் சகிலா, ராஜாராணி ஆகியோரின் சீரிய முயற்சியினால் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சிறுநீரக தானம் கொடுத்தவர் மற்றும் சிறுநீரக நோயாளி அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலமுடன் உள்ளனர். திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி  அரசு மருத்துவமனையில் இலவசமாக சிறப்பான முறையில்  சிறுநீரக கோளாறு பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக சிறப்பான முறையில் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *