மதுரை மாநகராட்சியில் இருந்து விழுப்புரம் மாநகராட்சிக்கு வெள்ள நிவாரண பொருட்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று விழுப்புரம் சென்றது. இந்த டிப்பர் லாரியை கற்பகராஜா என்ற ஓட்டுநர் இயக்கி சென்றார்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த மதுரை மாநகராட்சி பொறியாளர் ரமேஷ்பாபு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
மேலும் லாரியை ஓட்டி வந்த கற்பகராஜா என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments