திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரும்பாம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகுமார் தாயார் அம்மாக்கண்ணு (65). இவர் வீட்டிற்கு சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்திருந்த நபர் கை கால் வலிக்கு நிவாரண மருந்து உள்ளதாக கூறியுள்ளார்.
பின்னர் அம்மாக்கண்ணு மீது மருந்தை தடவிய உடன் சுயநினைவின்றி போக, அவர் அணிந்திருந்த ஆறு பவுன் சங்கிலியை திருடிக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மூதாட்டி விழித்து பார்த்த பின் தங்கச் சங்கிலி திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மூதாட்டியின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments