தமிழக அரசின் சில முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார், அதில் திருச்சியில் அமையவிருக்கும் முக்கிய நிறுவனங்கள் குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. குறிப்பாக இஎம்எஸ்ஸில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் ஜாபில் நிறுவனம் திருச்சியில் ரூ. 2000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இதன் மூலம் 5000 வேலை வாய்ப்பு உருவாவதுடன் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான புதிய கிளஸ்டரை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது என முதலமைச்சரின் எக்ஸ் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஜாபில் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு அரசுக் குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments