ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 1431 பசலி ஆண்டு துவங்குவதை முன்னிட்டு, நம்பெருமாள், தாயார் , சக்ரத்தாழ்வார் ஆகியோருக்கு புதுக் கணக்கு துவங்கப்பட்டது. முன்னதாக, புது கணக்கு ரசீதுகள் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து, பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்களும், பல்வேறு தொழில் செய்பவர்களும், கோவில் அலுவலகத்தில், ஸ்ரீரங்கம் கோவில் புதுக்கணக்கில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர்.
புதுக் கணக்கு துவங்குவதற்கான பூஜையில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி , அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments