ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுதிரும்பி வந்து பார்த்தபொழுது காரை காணவில்லை.
அப்பொழுது கார் தானாக சாக்கடையில் விழுந்த கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சகரை சாலையில் ஹேண்ட் பிரேக் போடாமல் காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார்.அப்பொழுது கார் பள்ளத்தில் நின்றதால் தானாக நகர்ந்து சாக்கடையில் விழுந்துள்ளது. நேற்றும் அச்சாலையில் இப்படித்தான் கட்டுப்பாட்டை
இழந்து கார் கொள்ளிடம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சகரை சாலை எப்பொழுதும் அதிக வெளியூர் கார்களின் நிறுத்துமிடமாக உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரால் சாலைக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் உள்ளது. நேற்று ஒரு விபத்து நடந்தும் போக்குவரத்து
போலீசாரால் அங்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இப்படியே அங்கு தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால் காவல்துறை அதிகாரிகள் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments