புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மணல்மேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (36). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதால், உயர் சிறப்பு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் விமானம் மூலம், திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
நான்கு மணி நேர பயணத்திற்கு பின், ஏர் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட லட்சுமணன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments