பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன்ராமராஜ். இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் சாலையில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட் வந்தார்.
மீன் வாங்கிவிட்டு 4 மணிக்கு காரில் மீனை ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் ராமராஜை சரம்பரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராமராஜன் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை உறையூர் மீன் மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments