திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் பிச்சை (45) கூலி தொழிலாளி இவர் மண்டையூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் அதில் 70 ஆயிரத்தை செலுத்தியுள்ளார் இந்த நிலையில் மீதி 30 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளது.
இந்நிலையில் பிச்சை அவரது நண்பர் ஒருவருக்கு பழனியிடமிருந்து வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிச்சையின் நண்பர் சரியாக அசலும் வட்டியும் கட்டாமல் இருந்துள்ளார்.
இதனால் பழனி பிச்சை நண்பர் மீதும் பிச்சை மீதும் கோபத்தில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் பிச்சை வழக்கம் போல் தனது கடன் 30 ஆயிரத்திற்கு உரிய வட்டி தொகையை செலுத்துவதற்காக நேற்று காலை பழனி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பழனி பிச்சையை நண்பர் ஒழுங்காக வட்டியும் செலுத்தவில்லை அசலும் செலுத்தவில்லை என்று கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பிச்சையை பழனி செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த பிச்சை வீட்டிற்கு வந்து வீட்டில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார் இதை பார்த்த பிச்சை குடும்பத்தினர் பிச்சையை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து பிச்சை அவரது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாரிடம் பிச்சை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments