அப்போது அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. மீண்டும் அதே நபர் இரவு சுவர் ஏறி குதித்து அரவை மில்லில் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பணத்தை பறிக்கும் போது அவரை பிடித்து கடுமையாக தாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இதில் திருட வந்த மர்ம நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இன்று அதிகாலை இறந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை அவர் இறந்த நிலையில் மேலாளர் திரேந்தர் மணிகண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். யார் என்ற விபரம் தெரியாத நபர் உயிரிழந்த இடத்தை மணிகண்டம் போலீசார் பார்வையிட்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 4 அசாம் மாநில பணியாளர்கள் (ஃபைசல் உக்,ரசூல் ரகுமான், ஷேக், முசிபுல் யுக்) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட வந்த நபர் அடித்தால் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments