திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சன்முகா நகர் பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி, இவர் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம் போல தனது வீட்டிலிருந்து கிளம்பி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்றம் அருகே உள்ள பாரதிதாசன் சாலையில் சென்று சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தனியார் கல்லூரி பேருந்து மங்கையர்க்கரசி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments