திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரயில்வே கேட் பகுதியில் ரவுடி பட்டியலில் உள்ள அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்கின்ற குவாட்டர் ரத்தினவேல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கையில் வாளுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது ரத்தினவேலும் அவனது கூட்டாளிகளும் டூவீலரில் தப்பி ஓட முயன்றனர். இதனை தொடர்ந்து குவாட்டர் ரத்தினவேலை அரியமங்கலம் போலீசார் பிடித்து ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments