திருச்சி அருகேயுள்ள மணிகண்டம் காவல் நிலைய சரகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை பிடிப்பதற்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீஸார் தர்மபுரியில் இருந்த குற்றவாளி அலெக்ஸ் என்பவரை கைது செய்தனர்.
இதனையடுத்து குற்றவாளி பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குற்றவாளி அலெக்ஸ் பயன்படுத்திய ஆயுதங்கள் தொட்டியம் அருகே உள்ள நீலியாம்பட்டி வனப்பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்ததாகவும், மறைத்து வைத்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக குற்றவாளியான அலெக்ஸை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது திடீரென குற்றவாளி தப்பியோடி போலீஸார் மீது கற்க்களை வீசியதில் காவலர் ராஜேஷ்குமார் என்பவர் பலத்த காயமடைந்தார். அப்போது சுதாரித்த தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் தப்பியோடிய குற்றவாளி அலெக்ஸைஐ முழங்காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
காயமடைந்த காவலர் ராஜேஷ் குமார் தொட்டியம் அரசு மருத்துவமனையிலும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி அலெக்ஸ் முசிறி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments