திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் திருப்பதி (40). இவர் கம்பி கட்டும் பிட்டர் வேலைக்காக உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதி இறந்து விட்டதாக இன்று காலை சின்ன சூரியூரில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி மனைவி லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து கல்யாண சுந்தரம் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தகவல் தெரிவித்ததோடு இறந்து போன திருப்பதி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன்
இறப்புக்குரிய காரணம் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் உஷ்பெஸ்கிஸ்தானில் இறந்து போன திருப்பதியின் உடலை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இறந்து போன திருப்பதிக்கு யோகேஷ் என்ற 14 வயது உள்ள ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மகனும், மோகனா (10) என்ற ஐந்தாவது படிக்கும் மகளும் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments