திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மெய்யம்பட்டி வெள்ளாள குளத்தில் மணல் திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி பிருந்தா மற்றும் புத்தாநத்தம் போலீஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை கண்டதும் வெள்ளாள குளத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிலர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதில் ஒருவர் பிடிபட்டார்
தொடர்ந்து ஜேசிபி, டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஜேசிபி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள நல்லூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பால்ராஜ் (30) என்பவரை கைது செய்தனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் வடக்கு இடையபட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைசெல்வியின் கணவர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் மணல் கொள்ளை சமந்தமாக தலைமறைவான திமுக பிரமுகர் நாகராஜ், டிப்பர் லாரி ஓட்டுநர் புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் லாரி, ஜேசிபி உரிமையாளர் என 4 பேரை புத்தாநத்தம் போலீஸார் தேடி வருகின்றனர்.
மணல் கொள்ளை சம்பவம் தொடர்பாக திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைசெல்வி மகன்கள் ஏற்கனவே கைது செய்யபட்டது மற்றும் மணல் அள்ள அனுமதி கோரி கடந்த ஆண்டு மணப்பாறையில் ஜேசிபி, லாரி வாகனங்கள் மூலம் அனைத்து சாலைகளையும் வழிமறித்து போராட்டத்தில் பங்கேற்றது குறிபிடதக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments