கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்கு பயணிகளை ஏற்றிவந்த சிறியரக சரக்கு வாகனமும், கரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற மணல் லாரியும், திருச்சி பனையபுரம் அருகே மோதிக்கொண்டன.
அந்த விபத்தில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33), கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில் சிகிச்சை பலனில்லாமல் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வடிவேலன் மகள் அட்சுதா (10), பின்னர் சத்தியானந்தமும் இறந்தனர்.இதனால் பலியானவர்களது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. சத்யானந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போது அவரையும், சம்பவ இடத்தில் பலியான அவரது மனைவி சூர்யா வின் உடலையும் பார்க்க,
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த தொட்டியப்பட்டியை சேர்ந்த சூரியாவின் தம்பி ரஞ்சித், அவரது மனைவி கிருத்திகா (21) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது சூர்யாவின் உடலை பார்த்த அதிர்ச்சியில் கிருத்திகா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறக்கும் போது கிருத்திகா, நிறைமாத (9 மாதம்) கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments