திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தத. கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாலைக்கு பிறகு பலத்த காற்று வீசியது. அதன் பிறகு சிறிது நேரம் மழை பெய்தது.
இதில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மன்னார்புரம் நோக்கி வந்த மாநகர அரசு பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் இடதுபுறம் இருந்த சிக்னல் கம்பம் பலத்த காற்றின் காரணமாக பேருந்து மீது விழுந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தகவல் அறிந்து வந்த அரியமங்கலம் போக்குவரத்து போலீசார் மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர்.
பேருந்தின் மீது மின்கம்பம் விழுந்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
11 May, 2023










Comments