திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தளுகை ஊராட்சியில் அனைத்து கட்சி சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், தளுகை காலணி பகுதியில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக, அ தி மு க, சிபிஐ, சிபிஎம், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது தளுகை ஊராட்சி மன்றம் அருகே முடிவடைந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments