திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குள் சாரைப்பாம்பு ஒன்று பள்ளி ஓட்டு கட்டிடத்தின் மேல் கூரையில் இருந்தது. இதனை கண்ட பள்ளி மாணவிகள் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பெயரில் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மேல் கூரையில் இருந்த 7 நீளம் கொண்ட கருஞ்சாரைப் பாம்பினை சிறிது நேரம் போராடி பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட பாம்பினை அருகில் இருந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments