திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரத்தில் மேச்சலுக்கு வந்த புள்ளி ஆண் மான் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளிமான் உடல் நசிங்கியபடி சாலையில் கடந்துள்ளது.
அவ்வழியாக வந்த இரவு நேர ரோந்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஆர் பாளையம் வன பாதுகாவலர் ஜான் ஜோசப், சாலையில் கிடந்த மானை மீட்டு உடற்கூற் ஆய்வுக்காக ஆட்டோ மூலம் எம்.ஆர் பாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது சாலை விபத்தில் உயிரிழந்த புள்ளி மானே உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் தகனம் செய்யப்படும் என தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments