திருச்சி இரயில்வே சந்திப்பில், இரயில் புறப்பட்ட நேரத்தில், அந்த இரயிலின் சன்னல் ஓரத்தில் பயணித்த தகவல் தொழில்நுட்ப (IT) தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் என்பவரிடம், தண்ணீர் பாட்டில் கொடுப்பது போல் ஓடிவந்தவர், நபர் வரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
மீண்டும் அடுத்துவந்த இரயிலில் இதேபோல நகைபறிக்க அந்த வாலிபர் நின்றபோது, அவரை இரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் அகரம் பங்காளி குப்பம் வடக்கு காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (26) என்பதும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 13 கிராம் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments