திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த நான், அவர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக அவரது உருவச்சிலை அமைத்து, கோவில் கட்டினேன் என்றார்.
சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்தமாக செலவு செய்து ஆறு மாதங்களில் கோவில் கட்டினேன். தேங்காய் மாங்காய், மரவள்ளி போன்றவை விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், அவரை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, ஐந்து ஆண்டுகளாக கனிசமான தொகை வைத்துள்ளேன். அவர் மூன்றாவது முறை பிரதமாக வேண்டும், என்று பழநிமலை முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.
அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த உடன், தங்கத் தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடா வெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன். பிரதமர் கோவிலுக்கு கும்பாபிேஷகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகு, நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன்.
பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030 வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments