Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கடலை தோட்டத்தில் ரத்தகாயங்களுடன் அலங்கோலாமாக மயங்கி கிடந்த பெண்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கோனேரிப்பட்டியில் வசித்து வரும் தங்கவேல் – பாக்கியலட்சுமி. இவர்களது மகள் ரம்யா வயது 31 என்பவர் அவரது தோட்டத்தில் மாலை கடலை கொடி எடுக்கும் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது தோட்டத்தில் அருகில் இருவர் மது அருந்தியதாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் ரம்யாவிடம் தகராறு செய்ததில் ரம்யாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது தம்பி சம்பவ இடத்திற்க்கு வந்தபோது ரம்யா சட்டை கிழிக்கப்பட்டு ரத்தகாயங்களுடன் அலங்கோலாமாக மயங்கி கிடந்துள்ளார். பின்னர் 108 உதவியுடன் அவர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரம்யா கொடுத்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் மணிவேல் மனைவி உமா தேவனூர் பகுதியில் ஆசிரியராக பணிபுரியும் முத்துவீரன் மகன் குருமூர்த்தி ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பழனியாண்டி மகன் மணிவேல் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மூன்று நபர்களும் தலைமறைவாகி உள்ளனர். திருமணம் ஆகாத பெண்ணை மானபங்கம் படுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *