திருச்சி கோப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுவாதிகாவிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments