திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட முசிறி சாலியர் தெருவை சேர்ந்த நாகராஜன் (கூலி தொழிலாளி) இவரது மனைவி முத்துலட்சுமி (42). இவர் விவசாய கூலி வேலை செய்து ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்கள்.
இன்று முத்துலட்சுமி வீட்டருகில் உள்ள முசிறி காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வரும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது, அப்பொழுது சாலையில் வரும் பொழுது இடி மின்னல் தாக்கி முத்துலட்சுமி கழுத்தில் லேசான காயத்துடன் நிகழ்விடத்தில் கீழே கிடந்துள்ளார்.
இதுக்குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்து முசிறி அரசு மருத்துவமனைக்கு முத்தரட்சுமியை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது முத்துலட்சுமி சம்பவ நிகழ்விடத்தில் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து தகவல் அறிந்த முசிறி காவல்துறையினர் ஸ்ரீ அரசு மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளியை தொடர்ந்து இடி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments