திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று சமயபுரம் பகுதியில் திருச்சி சென்னை
தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தனது யமஹா இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.அதனை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து.அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் யார் என்பது குறித்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision
Comments