புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர். புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் 24 வயதுடைய Bsc nursing படித்துள்ள இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி, அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்புக்கு அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதால் அந்தப் பெண் கருவுற்றுள்ளார்.
இதனால் அந்த காவலர் கருக்கலைப்பு மாத்திரைகளை கட்டாயப்படுத்தி உட்கொள்ள வைத்து கருவை கலைக்க செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாலமுருகன் ஏற்பாடுகள் செய்து வருவதை அறிந்த அந்த பெண் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரானது திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை செய்து வந்ததில் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் உஷா ஆகியோர் பாலமுருகன் காவல்துறையில் பணியாற்றி வருபவர் என்பதால் அவர் ஆதரவாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்த ஆதாரங்களையும், அவரின் செல்ஃபோனையும் பிடுங்கி பாலமுருகனிடம் கொடுத்துவிட்டு அந்த இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி புகாரை வாபஸ் வாங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாலமுருகன் உடனடியாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதை அறிந்த அந்த இளம் பெண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். பாலமுருகன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments