திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை பகுதியில் வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சி நோக்கி வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் பெயர் மாதவன் (34) முருங்கை பேட்டையை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments