திருச்சி மாவட்டம். சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை, திருச்சி கோட்டத்துடன் இணைந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சேவை முகாமினை தனது கல்லூரி வளாகத்தில் (22.04.2024) & (23.04.2024) மற்றும் (24.04.2024) ஆகிய மூன்று தேதிகளில் நடத்தியது.
இம்முகாமிற்கு கல்லூரியின் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். K.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இம்முகாமில் புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவை செய்தல் மற்றும் கட்டாய புகைப்பட மாற்றம் மற்றும் கைவிரல் ரேகை திருத்தம் ஆகிய சேவைகளை வழங்கினர். முகாமில் 117 பயனாளிகள் பல்வேறு வகையான திருத்தங்களை செய்து பயனடைந்தனர். கல்லூரியன் செயலர் ஸ்ரீ. S. ரவீந்திரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர். D. வளவன் இத்தகைய பயனுள்ள முகாம்களை சாரநாதன் பொறியியல் கல்லூரி நடத்துவது பெருமைக்குரியதாகும் எனவும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் முயற்சிகளையும் செயல்பாட்டினையும் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்ட அதிகாரிகள் இம்முகாமினை நன்முறையில் செய்து கொடுத்ததற்காக தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். மேலும் முகாம் வெற்றி பெற தங்களை ஈடுபடுத்திக்கொண்ட கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அளப்பரிய சேவைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென முகாமில் பயனடைந்தவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். K. கார்த்திகேயன் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments