Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ABVP திருச்சி மாவட்ட மாணவத் தலைவர்கள் சந்திப்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு திருச்சி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது திருச்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இச்சந்திப்பில் இந்த வருட உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் இந்த வருட புதிய மாநகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ABVP தேசிய செயலாளரும், தென் தமிழக மாநில அமைப்பு செயலாளருமான ஸ்ரீ.முத்துராமலிங்கம், தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா, மாநில துணை தலைவரும் திருச்சி மண்டல பொறுப்பாளருமான போராசிரியர் மங்களேஷ்வரன்

தேசிய செயற்குழு உறுப்பினரும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டல அமைப்பு செயலாளருமான ஸ்ரீ.தருண் சிங், தென் தமிழக மக்கள் தொடர்பாளர் ஸ்ரீ. ரூபராஜா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனையடுத்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் விபரம் : திருச்சி மாநகர தலைவர் மதன், மாநகர செயலாளர் சக்திவேல், மாநகர இணை செயலாளர் டிபானி, மாநகர இணை செயலாளர் சந்தோஷ் குமார், மாநகர இணை செயலாளர் டயனா, மாநகர இணை செயலாளர் விஜய், மாநகர அலுவலக செயலாளர் கோகுலகிருஷ்ணன்,

மண்ணச்சநல்லூர் நகர தலைவர் துளசி, நகர செயலாளர் செல்வகணேஷ், லால்குடி நகர ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், நகர செயலாளர் தீபக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பு ஏற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *