தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளினை சமூகநீதி நாளாக அறிவித்து, அவரது பிறந்த நாளில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று (17.09.2021) தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு மலர் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்திட அனைத்து அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மீண்டும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி ஜெயப்ரீத்தா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் தமிழ்கனி, சிவசுப்பிரமணியம்பிள்ளை மற்றும் துணை ஆட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு அதிகாரிகள் மலர் தூவி, சமூக நீதி நாள் உறுதிமொழியை ஆணையர் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜி.குமரேசன், உதவி ஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments