Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் கோவிலின் தங்க காணிக்கை திருடிய செயல் அலுவலர் – காலதாமத புகாரால் இணையணைரிடம் காவல்துறை விசாரணை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று (15.12.2022) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அறநிலைத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இதில், திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் (EO) வெற்றிவேல், ரூ.50 லட்சம் மதிப்பு 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் வைத்த போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி பறிமுதல் செய்து கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் ஒப்படைத்தார்.

மேலும் கோயில் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆராய்ந்த போது, அவர் திருடியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து வெற்றிவேல் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயல் அலுவலர் வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

சமயபுரம் கோவிலில் நேற்று (15.12.2022) உண்டியல் காணிக்கை எண்ணபட்டபோது இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கோவில் இணை ஆணையர் இன்று (16.12.2022) புகார் அளித்துள்ளார். நேற்று நடந்த திருட்டு சம்பவத்திற்கு காலதாமதமாக புகார் அளித்தது ஏன் என இணை ஆணையரிடம் போலீசார் கேள்வி எழுப்பினர். மேலும் உண்டியல் காணிக்கை என்னும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் அறநிலைத்துறை ஆணையர் மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் காணிக்கையாக பெற்ற தங்கம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தற்போது செயல் அலுவலர் பிடிபட்டுள்ளார். 

சக்தி வாய்ந்த ஸ்தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இதுபோன்று நடப்பது சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் காணிக்கை சரிவர எண்ணி அறநிலையத்துறைக்கு வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக காணிக்கை எண்ணிய பொழுது அவர் தங்க காசுகளை திருடியது தெரியவந்துள்ளது. பொதுமக்களும் பிடித்து அடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து தற்பொழுது பக்தர்கள் காணிக்கையை எண்ணுவதை அறநிலையத்துறை நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோள் எழும்பியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanOll

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *