திருச்சி மாவட்டம், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் கவிதா. இவர் சமூக விரோத செயல்களுக்கு துணை போனதாகவும், சீருடைப்பணியின் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும் புகார்கள் சென்றன.
இதையடுத்து, கடந்த, 29ம் தேதி சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆய்வுக்கு சென்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை நடத்தி, காவல் உதவி ஆய்வாளர் கவிதாவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில், உரிய அனுமதியின்றி அந்த பெண்ணின் கணவன் வீட்டின் பூட்டை உடைத்த சர்ச்சையில் சிக்கியவர் எஸ்.ஐ கவிதா, என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் திருச்சி எஸ்.பி., வருண்குமார், 10 நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். அப்போது ஏற்கனவே, லால்குடி எஸ்.பி., தனிப்படையாக இருந்து, தற்போது திருவெறும்பூர் பகுதி எஸ்.பி., தனிப்படையாக இருக்கும் எஸ்.ஐ., வினோத், போலீசார் பிரபு, சுசீந்திரன் ஆகியோர், நம்பர் 1 டோல்கேட் ராஜகோபலபுரம் பகுதியில், முன்பு இருந்த அறிமுகத்தை வைத்து, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி.,யின் கவனத்துக்கு வந்ததும், மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதில் சுசீந்திரன் என்பவர், அண்மையில் சமயபுரம் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது, போலீசாரின் ரெய்டில் சிக்கியவர் என்பதால், அவருக்கு கூடுதல் தண்டனையும் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments