பாஜக கொள்கைபரப்பு செயலாளர், நடிகை குஷ்பு மகளிர் உரிமை தொகையை பிச்சை என பேசினார் இது தமிழகம் முழுவதும் ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கண்டித்து உறையூர் குறத் தெருவில் குஷ்பு உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து திருச்சி மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் குஷ்புவின் உருவ படத்தை துடப்பத்தால் அடித்து எரித்தனர். நடிகை குஷ்புவின் உருவ படத்தை கிழித்து எரித்து காலால் மிதித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து நடிகை குஷ்புவுக்கு எதிராக திமுக திருச்சி மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நடிகை குஷ்பூவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவரது உருவப்படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments