திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட நீதிபதி k.பாபு ,நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். இம்முகாமில் மூத்த வழக்கறிஞர் தனி ஸ்லால், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து, மருத்துவர்கள் சரவணமுத்து, பிரவீன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.
Comments