ஏர் இந்தியா எக்ஸ்பிரஸானது தற்போது திருச்சியில் இருந்து மஸ்கத்திற்கு நேரடி விமானசேவையை புதன்கிழமைகளில் வழங்கி வருகிறது. இந்த சேவைக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்ததால் கூடுதலாக வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் நேரடி சேவை வழங்கவுள்ளது.
மஸ்கத் வாழ் தமிழர்கள் வழக்கம்போல் இந்தச் சேவைக்கும் ஆதரவு தெரிவித்து மேலும் கூடுதல் சேவைகளைப் பெறுவது உங்கள் கைகளில் உள்ளது. கூடுமானவரை பம்பாய், ஹைதராபாத் வழியாகப் பயணித்து திருச்சி வருவதை தவிர்ப்பீர். முடிந்த அளவு இந்த நேரடி சேவைகளை பயன்படுத்துவீர். தங்கள் பயணம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இனிதாகட்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments