ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர்.
குறிப்பாக, பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகேயுள்ள, அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க, ஆண்டுதோறும், ஆடி அமாவாசை நாளில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருவர். அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால், அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் செய்ய, பல்லாயிரக் கணக்கானோர் கூடினர். காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்க்கு திதி கொடுத்தனர்.
ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இந்த முறை வருவதால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 16ம்தேதி திதி, தர்ப்பணம் கொடுத்தால் மிகசிறப்பு எனவும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என குறிப்பிட்டடுள்ளனர். மாவட்ட , மாநகர நிர்வாகங்கள் சார்பில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மக்கள் பெருந்திரளாக கூடியதால், மாம்பழச் சாலையிலிருந்து, அம்மா மண்டபம் வழியாக, ஸ்ரீரங்கம் செல்லும் பாதை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments