Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஆயுதம் தயாரிப்பு பட்டறை உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு துறை தலைமை இயக்குநர்கள் மேலான அறிவுரைகளின்படியும், உத்தரவின்படியும் (ஆப்ரேசன் டிஎஸ்ஆர்எம் (ஆபரேஷன் டிஸார்ம்), திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுத தயாரிப்பு பட்டறைகள், ஆயுதங்கள் புதியதாக வாங்கும் நபர்கள் மற்றும் ஆயுதங்கள் புதுப்பிக்க வரும் நபர்களின் விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அவற்றையும் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்

மேலும், ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்து சரக காவல  உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், திருச்சி மாநரகப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், எவரேனும் ஆயுதங்களுடனோ அல்லது கூட்டாகவோ அல்லது அசம்பாவிதம் செய்யும் குற்ற நோக்கத்துடன் பேசுவதற்கான தகவல் தெரியும். குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்றுமதி அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன்பேரில், திருச்சி மாநகரத்தில் 28.09.2021ஆம் தேதி ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து 1) காந்திமார்க்கெட் காவல் நிலையம், 2) கோட்டை காவல்நிலையம் 3) பாலக்கரை காவல் நிலையம், 4) தில்லைநகர் காவல் நிலையம், 5) உறையூர் காவல் நிலையம் மற்றும் 6) ஸ்ரீரங்கம் காவல் நிலையம் ஆகிய 6 இடங்களில் மொத்தம் 118 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆர் சக்திவேல் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் பேசினார். அதுபோன்று, ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்வது 1) கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் கவிதா ஹோட்டல், குறிஞ்சி ஹோட்டல், கல்பனா ஹோட்டல், ரயில்வே ஜங்சன் ரவுண்டானா, பர்வீன் டிராவல்ஸ், வ.உ.சி.ரோடு, சுப்பிரமணியபுரம் ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், 2) பொன்மலை மண்டலத்தில் , 3) கோட்டை காவல் சரகம் சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட் நான்கு ரோடு சந்திப்பு, வரகனேரி, மரக்கடை ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், 4) ஸ்ரீரங்கம் காவல் சரகம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, மூலத்தோப்பு, சாலை ரோடு, ஜெயந்தி ஹோட்டல் ஆட்டோ ஸ்டாண்டுகளுடன் 28 இடங்களில் 375 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இனிவருங்காலங்களில் குற்றச்சாட்டுகளை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு எவரேனும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை புதியதாக வாங்கவோ அல்லது செய்யச்சொல்லவோ அல்லது புதுப்பிக்கவோ ஆயுத தயாரிப்பு பட்டறைக்கு வரும் நபர்களின் உண்மையான முகவரி மற்றும் செல்போன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய பிறகே ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும், கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்கூட்டியே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், அவ்வாறு தகவல் தருபவர்களின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டு கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *