திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருச்சி அறிவியல் இயக்கம் மற்றும் திருச்சி வானவியல் இயக்கம் மூலம் வான் நோக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணன் வழிகாட்டலின் பேரில் துணை ஆணைய க.பாலு மேற்பார்வையில் பிராட்டியூர் பள்ளி மாணவர்கள் 400 பேர் வானில் மிளிரும் கோள்களை மாணவர் உற்றுநோக்க உதவினர்.
சூரியனை சுற்றி வரும் 7 கோள்கள் ஒரு கோட்டில் அமையுவதை 3 தொலை நோக்கு கருவி முலம் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஆசாதேவி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் பொறுப்பாளர்கள் ஜெயபால், சாந்தி, மோசஸ், ஸ்டானிஷ், பாலசரவணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments