திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக முசிறி உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் அறிவுறுத்தலின் படியும் உழவர் சந்தையில் நேரடி கண்காணிப்பில் அவர்கள் நிர்ணயித்த விலையின் அடிப்படையில் காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனை திருச்சி மாவட்டம் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் மோகன் கார்த்திக் மற்றும் முசிறி வேளாண் அலுவலர் ரமேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
முசிறி தாலுக்கா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் வாளசிராமணி மேலாண் இயக்குனர் சு.கதிர்வேல் கூறுகையில்… நபார்டு உதவியுடன் உருவாக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சாலம் பவுண்டேஷன் துறையூர் என்ற சமூக சேவை அமைப்புடன் இணைந்து நாங்கள் covid-19 தடுப்பு பணியில் கடந்த 4 நாட்களாக காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
முசிறி உழவர் சந்தையின் நேரடி கண்காணிப்பில் அவர்கள் நிர்ணயித்த விலையில் முசிறி தாலுக்கா முழுவதும் 14 வாகனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments