அறுவடைக்கு தயாராக இருந்த வாழை தண்ணீரின்றி கருகி சூறாவளிக் காற்றினால் சேதமடைந்த வாழைபயிர்களுக்கு இழப்பீடுகோரி விவசாய சங்க பிரதிநிதிகள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம்.
மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லததால் கால்வாய், வாய்க்கால்களில் தண்ணீர் கிடைக்கப்பெறாததாலும், பருவமழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து திருச்சி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வாழை பயிர்கள் அறுவடை சமயத்தில் தண்ணீரின்றி முற்றிலுமாக காய்ந்து, வாடிவதங்கி மண்ணில் சாய்ந்துள்ளது விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. கந்துவட்டி, வங்கிகள் மற்றும் கூட்டுறவுசங்கங்களில் கடன்பெற்று வாழை சாகுபடி செய்து ஏக்கருக்கு 2 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றையதினம் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரைச் சந்தித்து இழப்பீடு வழங்ககோரி தங்களது மனுவை அளித்தனர். அதேநேரம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் கடந்த 2தினங்களுக்கு முன்பு பெய்த சூறாவளிகாற்றினால் 1லட்சம் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததுடன், சோளபயிர்கள் மற்றும் வெற்றிலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்கவில்லையென்றும், போர் போட்டும் தண்ணீர் கிடைக்காமல் பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்யமுடியாமலும், இதுபோன்ற தண்ணீரின்றி கருகும் பயிரால் கடன்தொல்லையால் விவசாயிகள் விபரீத முடிவுக்கு தள்ளப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments