திருச்சிராப்பள்ளி கேர் பொறியியல் கல்லூரியில் (27.07.2023) அன்று வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (16.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமய மூர்த்தி, வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments