திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா. கருப்பையா இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் சென்று திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானம் சென்று அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், வேட்பாளரும் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இவர்களுடன் திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Comments