அதிமுக தலைமைக் கழகம் இன்று தங்களது வேட்பாளர்களை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் இடங்களில் அறிவித்துள்ளது திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு 20வது வார்டில் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே துணை மேயராக இருந்த சீனிவாசன் 34 வது வார்டில் போட்டியிடுகிறார்.
அதிமுகவை பொறுத்த அளவு மேயர் வேட்பாளராக இளம் வயது ஜவஹர்லால் நேரு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிமுக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.முன்னாள் துணை மேயர் சீனிவாசனும் ரேசில் உள்ளார்.இவர் அமமுகவிற்க்கு சென்று கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். அதிமுக பாஜக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் முறிந்த நிலையில் அதிமுக 65 வார்டுகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. வெற்றி பெறும் வேட்பாளர் பட்டியலாக ஏற்கனவே வார்டு கவுன்சிலராக இருந்து பணியாற்றியவார்கள் ,முக்கிய நிர்வாகிகளை சேர்த்து அதிமுக வெளியிட்டுள்ளது .திமுக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை .
காங்கிரஸ் கான வார்டு ஒதுக்கீடு தொடர்ந்து இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது. கடந்த முறை 2011ல் அதிமுகவின் பெண் மேயர் ஜெயா தேர்ந்தெடுக்கப்பட்டார் .மீண்டும் மேயரை தக்க வைத்துகொள்ளவும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் விட்டதை பிடிப்பதற்காக 65 வார்டுகளிலும் வெற்றி முனைப்புடன் செயல்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments