அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முருகானந்தம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் செயல்பாடுகளை பாராட்டி கடந்த 10 தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் வாழ்த்து போஸ்டர் ஒட்டி இருந்தார். மேலும் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இது பற்றி அறிந்த அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக இன்று அறிக்கை வௌியிட்டுள்ளனர்.
அதில் அதிமுக கோட்பாட்டை மீறி நடந்து கொண்டதால் முருகானந்தம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments