தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க முயன்ற பொழுது பிடிபட்டனர்.
அது தொடர்பாக ஏற்கனவே அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் இருவரும் புகாரை விசாரிக்காமல் திமுகவுக்கு ஆதரவாக நடப்பதாக குற்றச்சாட்டிய அதிமுக வழக்கறிஞர் அணியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த நான்கு மாணவர்களை சமயபுரம் காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது வழக்கு பதியாமல் காவல்துறையினரே அந்த 4 பேரை வாக்களிக்க வைத்துள்ளதாக குற்றம்சாட்டி புகார் அளித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments